போதத் சந்திப்பு தொடருந்து நிலையம்
போதத் சந்திப்பு தொடருந்து நிலையம் Botad Junction railway station | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | போட்டாத் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 22°10′59″N 71°39′57″E / 22.182931°N 71.665809°E | ||||
ஏற்றம் | 97 மீ (318.2 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
தடங்கள் | சுரேந்திரநகர்-பாவ்நகர் வழித்தடம் போதத்-அகமதாபாத் வழித்தடம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையான, தரைத்தளம் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | BTD | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
கோட்டம்(கள்) | பாவாநகர் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
போதத் சந்திப்பு தொடருந்து நிலையம் (Botad Junction railway station) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பொடாட் மாவட்டத்தில் உள்ள போட்டாத் நகரத்திற்குச் சேவை செய்யும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்திய ரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலத்தின் பாவ்நகர் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது.
போதத் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 97 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 2016ஆம் ஆண்டு ஒற்றை டீசல் அகல தொடருந்து பாதையுடன் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிலையத்தில், 34 தொடருந்து நின்று செல்கின்றன. இரண்டு தொடருந்து இங்கிருந்து சேவையினைத் தொடங்குகின்றன. பாவ்நகர் வானூர்தி நிலையத்திலிருந்து இந்நிலையம் 75 கிலோமீட்டர்கள் (47 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6]
தொடருந்து
[தொகு]பின்வரும் தொடருந்துகள் போதத் சந்திப்பில் இரு திசை பயணங்களிலும் நின்று செல்லும்:
- 12945/46 சூரத்து-மஹுவா அதிவேக விரைவுவண்டி
- 22993/94 பாந்த்ரா அதிவேக விரைவுவண்டி
- 22989/90 பாந்த்ரா -மஹுவா விரைவுவண்டி
- 22935/36 பாந்த்ரா -பாலிதானா விரைவுவண்டி
- 12941/42 பரஸ்நாத் விரைவுவண்டி
- 19259/60 கொச்சுவேலி-பாவ்நகர் விரைவுவண்டி
- 17203/04 பாவ்நகர் -காக்கிநாடா துறைமுகம் விரைவுவண்டி
- 12971/72 பாந்த்ரா -பாவ்நகர் விரைவுவண்டி
- 22963/64 பாந்த்ரா -பாவ்நகர் வாராந்திர அதிவேக விரைவுவண்டி
- 19107/08 பாவ்நகர் -உதம்பூர் ஜென்மபூமி விரைவுவண்டி
- 19579/80 பாவ்நகர் -தில்லி சராய் ரோஹில்லா இணைப்பு விரைவுவண்டி
தொடருந்து தீ விபத்து
[தொகு]போதத் தொடருந்து நிலைய நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் தொடருந்தில் 18 ஏப்ரல் 2013 அன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாது புறப்படவிருந்த பயணிகள் தொடருந்து பயணிகள் பயணம் செய்வதற்கு முன்னரே தீப்பிடித்ததால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடருந்து நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Departures from BTD/Botad Junction (5 PFs)". பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ "BTD/Botad Junction". பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
- ↑ "BTD:Passenger Amenities Details As on: 31/03/2018 Division: Bhavnagar". Raildrishti.
- ↑ "Minster(sic) of Railways announces extension of services of 22 Trains". Dailyhunt.
- ↑ "Sabarmati-Botad and Sabarmati-Ranuja tracks to be closed for Gauge Conversion work". Rail News.
- ↑ "अहमदाबाद-बोटाद पैसेन्जर ट्रेन इंजन में लगी आग". Patrika (in இந்தி).
- ↑ [குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ விபத்து "[குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ விபத்து]"]. தினகரன். 18. 18.04.2023. குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ விபத்து.